"இந்தியாவில் கழித்துக் கட்ட வேண்டிய 4 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன" -மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 4 கோடிக்கு மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் தவிரப் பிற மாநிலங்களின் வாகனப் பதிவு குறித்த தரவுகளைத் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடகத்தில் 70 லட்சம் பழைய வாகனங்கள், உத்தரப்பிரதேசத்தில் 56 லட்சம் பழைய வாகனங்கள், டெல்லியில் 50 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கேரளத்தில் 34 லட்சம் பழைய வாகனங்களும், தமிழகத்தில் 33 ஆயிரத்து 64 ஆயிரம் பழைய வாகனங்களும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கப் பழைய வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
Comments